டிரம்ப் பதவியேற்க மிகப்பெரிய எதிர்ப்பு. போராட்டம் தீவிரமடைவதால் பரபரப்பு
அமெரிக்க அதிபர் தேர்தலில் அனைவரும் எதிர்பார்த்த ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சி தோல்வி அடைந்து யாருமே எதிர்பார்க்காத டிரம் வெற்றி பெற்றதால் அமெரிக்கர்கள் மட்டுமின்றி உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன,
இந்தியா, சீனாவுக்கு எதிரான நடவடிக்கை, அகதிகள் விஷயத்தில் கெடுபிடி, இஸ்லாமியத்திற்கு எதிரான கருத்து உள்பட டிரம்ப் அதிபராக பதவியேற்றதும் ஏகப்பட்ட பிரச்சனை கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி அமெரிக்காவில் உள்ள முக்கிய நிறுவனங்கள் இடமாறவும், இதனால் வேலைவாய்ப்பு குறையவும் வாய்ப்பு உள்ளதால் டிரம்ப் அதிபராக பதவியேற்க கூடாது என்று போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக கலிபோர்னியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் இறங்கி கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்துவதால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது,. டிரம்ப் அதிபராக பதவி ஏற்கக்கூடாது என்று வலியுறுத்தி கையெழுத்து இயக்கமும் அமெரிக்கா முழுவதும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.