ஒபாமாவிடம் தோல்வி அடைந்த பெண்ணுக்கு மந்திரி பதவி. டிரம்ப் அதிரடி முடிவு

ஒபாமாவிடம் தோல்வி அடைந்த பெண்ணுக்கு மந்திரி பதவி. டிரம்ப் அதிரடி முடிவு

donaldசமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து மாபெரும் வெற்றி பெற்றார் டொனால்ட் டிரம்ப். வரும் ஜனவரி மாதம் பதவியேற்கவுள்ள டிரம்ப், தனது அமைச்சரவையில் யார் யார் இருக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறாராம்

இதில் கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஒபாமாவுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வி அடைந்த பெண் வேட்பாளர் மிட்ரோம்னியை வெளியுறவு உள்துறை மந்திரி பதவிக்கு நியமனம் செய்ய ஆலோசித்து வருகிறார்.

சமீபத்தில் நியூஜெர்ஸி நகரில் மிட்ரோம்னியை, டிரம்ப் சந்தித்ததாகவும், இந்த சந்திப்பு சுமார் 80 நிமிடங்கள் நடந்ததாகவும் அப்போது அவருக்கு மந்திரி பதவி வழங்குவது குறித்து அவரிடம் பேசியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆனால் அதற்கு மிட் ரோம்னி பதில் எதுவும் கூறவில்லை. மந்திரி பதவியை அவர் ஏற்பாரா? மாட்டாரா? என்ற கேள்விக் குறி எழுந்துள்ளது.

Leave a Reply