பள்ளி ஆசிரியர்களுக்கு துப்பாக்கி கொடுக்க டொனால்ட் டிரம்ப் ஆலோசனை

பள்ளி ஆசிரியர்களுக்கு துப்பாக்கி கொடுக்க டொனால்ட் டிரம்ப் ஆலோசனை

அமெரிக்க பள்ளிகளில் அவ்வபோது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி வருவதால், பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆசிரியர்களுக்கு துப்பாக்கி வழங்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆலோசனை செய்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த வாரம் முன்னாள் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 17 மாணவர்கள் பரிதாபமாக பலியானார்கள். இந்த சம்பவத்தை அடுத்து துப்பாக்கி நடமாட்டத்தை கட்டுபடுத்துவது குறித்து உயரதிகாரிகளிடம் அதிபர் டிரம்ப் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனையின்போது பள்ளிகளில் துப்பாக்கி சூடு சம்பவம் நடக்காமல் இருக்க இனி ஆசிரியர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று அவர் ஆலோசனை கூறினார். மேலும் துப்பாக்கி துப்பாக்கி சூடு நடப்பதை தடுக்க உரிய சட்டங்களை கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாகவும் டிரம்ப் உறுதி அளித்தார்

முன்னதாக புளோரிடா பள்ளி துப்பாக்கி சூடு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களை டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு அழைத்து பேசினார். அதில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் துப்பாக்கி சூட்டில் பலியான மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply