டிரம்ப் மீதான் செக்ஸ் புகாருக்கு மனைவியின் பதில் என்ன? பரபரப்பு தகவல்
வரும் நவம்பர் 7 ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை எதிர்த்து போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மீது ‘செக்ஸ்’ வீடியோ புகார் சில நாட்களுக்கு முன் எழுந்தது. அதில் பெண்கள் பற்றி அவர் இழிவாக கூறியதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. அதை தொடர்ந்து பல பெண்கள் டிரம்ப் மீது நேரடியாக ‘செக்ஸ்’ குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் டிரம்ப் மறுப்பு தெரிவித்தார்.
இருப்பினும் டிரம்புக்கு பெண்கள் மற்றும் வாக்காளர்கள் மத்தியில்செல்வாக்கு சரிந்ததாக சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்து வாக்கெடுப்பில் நிரூபணம் ஆனது
இந்நிலையில் முன்னாள் மாடல் அழகியும், டொனால்டு டிரம்பின் மனைவியுமான மெலானியா (45) தனது கணவர் மீதான புகார் குறித்து கூறியபோது, எனது கணவர் மீதான ‘செக்ஸ்’ புகார்கள் பொய்யானவை. ஏனெனில் எனது கணவர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர் ஒரு ‘ஜென்டில்மேன். அவர் எப்போதும் இது போன்ற தவறுகள் செய்யமாட்டார்.
பெண்கள் மீது அவருக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது என்றார். மேலும் தனது கணவர் மீது கூறப்பட்டுள்ள செக்ஸ் புகார்களை மறுத்து பெண்களிடம் பிரசாரம் செய்து வருகிறார்.