ஆடம்பர சொந்த மாளிகையா? வெள்ளை மாளிகையா? டிரம்ப் தங்குமிடம் குறித்த தகவல்
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரங்க், பெரிய கோடீஸ்வரர் என்பதால் அவர் தற்போது தங்கியிருக்கும் ஆடம்பர பங்களாவை விட்டுவிட்டு வெள்ளை மாளிகைக்கு குடிவருவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
டிரம்ப்பின் மாளிகையில் ஒருசில பகுதிகள் 24 காரட் தங்கத்தால் ஆனவை. மேலும் விலை உயர்ந்த சலவை கற்களால் இழைக்கப்பட்டுள்ள அந்த பங்களாவில் டிரம்ப் கடந்த 30 ஆண்டுகளாக தங்கியுள்ளார். இந்த மாளிகையில் இருக்கும் வசதியில் பாதிகூட வெள்ளை மாளிகையில் இருக்காது என்பதால் அவர் வெள்ளை மாளிகைக்கு செல்ல மாட்டார் என்றும் அப்படியே சென்றாலும் வார இறுதியில் அவர் தனது சொந்த பங்களாவுக்கு வந்துவிடுவார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் டிரம்ப்-மெலானியா தம்பதியின் 10 வயது மகன் நியூயார்க்கில் படித்து வருகிறார். வெள்ளை மாளிகை வாஷிங்டனில் இருப்பதால் உடனடியாக அதிபரின் குடும்பம் வெள்ளை மாளிகைக்கு மாறுவதில் சிக்கல் உள்ளது.