லண்டன் தீவிரவாத தாக்குதல்: மேயருக்கு டிரம்ப் கண்டனம்
இங்கிலாந்து நாட்டில் உள்ள மான்சென்ஸ்டரில் நடத்தப்பட்ட தீவிரவாதிகளின் தற்கொலை தாக்குதலில் இருந்தே இன்னும் அந்நாட்டு மக்கள் மீள முடியாமல் இருக்கும் நிலையில் நேற்று லண்டனில் உள்ள பிசியான பரோ மார்க்கெட் என்ற பகுதியில் தீவிரவாதிகள் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தினர்.
தீவிரவாதிகல் வந்த வேன் பரோ மார்க்கெட் பகுதியில் கண்மூடித்தனமாக ஓடி நடந்து சென்றவர்கள் மீது மோதியது. மேலும் அந்த வேனில் இருந்த இறங்கிய தீவிரவாதிகள் கையில் உள்ள கத்தியால் கண்ணில் தென்பட்டவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 48 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதல் காரணமாக லண்டனில் உள்ள மற்ற இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் லண்டன் நகர மேயர் சாதிக் கான், “மற்ற இடங்களுக்கு எச்சரிக்கை விட வேண்டிய அவசியமில்லை” என தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் தெரிவிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப்,” குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளனர். 48 பேர் காயமடந்துள்ளனர். ஆனால், லண்டன் மேயர் எச்சரிக்கை விடவேண்டிய அவசியமில்லை என்று சொல்கிறார்” என டுவீட் செய்திருந்தார்.