நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லுமா? சென்னை ஐகோர்ட்டியில் திமுக வழக்கு

நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லுமா? சென்னை ஐகோர்ட்டியில் திமுக வழக்கு

சசிகலா ஆதரவு முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி கடந்த சனிக்கிழமை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக சபாநாயகர் தனபால் அவர்களால் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜனநாயகத்திற்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டு நடத்திய வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்க கோரி திமுக எம்.எல்.ஏக்கள் கவர்னரிடம் முறையிட்டனர்.

இந்நிலையில் இன்று திமுக சார்ப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முறையற்ற முறையில் நடந்த இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் தி.மு.க எம்எல்ஏக்கள் பேரவையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டது குறித்தும், திமுக தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘தி.மு.க-வின் இந்த மனு நாளை அவசர வழக்காக விசாரிக்கப்படும்’ என்று சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது. இந்த விசாரணையில் திருப்பங்கள் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

Leave a Reply