TS EAMCET 2016 பொது நுழைவுத்தேர்வு தேதி மாற்றம்

TS EAMCET 2016 பொது நுழைவுத்தேர்வு தேதி மாற்றம்

examஹைதராபாத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் TS EAMCET 2016 நுழைவுத்தேர்வு தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக TS EAMCET 2016 நுழைவுத்தேர்வு மே 2-ம் தேதி நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால் மாணவர்களின் நலன் கருதி நுழைவுத்தேர்வு மே 15-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

பொறியியல், விவசாயம் மற்றும் மருத்துவம் ஆகிய படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்காக பொது நுழைவுத்தேர்வை ஆண்டுதோறும் இந்த பல்கலை நடத்தி வருகின்றது.

2016-17ம் கல்வியாண்டில் இளங்கலையில் பல்வேறு படிப்பில் சேர்க்கை பெறுவதற்காகவும், தெலங்கானாவில் உள்ள தனியார் பல்கலையில் சேர்க்கை பெறுவதற்காகவும் இந்த நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

பொறியியல் பிரிவு: காலை 10 முதல் 1 மணி வரை

விவசாயம் மற்றும் மருத்துவ பிரிவு: மதியம் 2.30 முதல் 5.30 வரை தேர்வு நடைபெறுகிறது.

மே 15-ம் தேதி நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதற்கான நுழைவுச்சீட்டை மே 12 முதல் ஆன்லைனில் பெற்றுகொள்ளலாம். மே 27 தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளது.

மேலும் விவரங்கள் அறிய பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply