உழைப்பு வீணாகிவிட்டது. தினகரன் புலம்பல்

உழைப்பு வீணாகிவிட்டது. தினகரன் புலம்பல்


சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு அறிவித்த நிலையில் இந்த அறிவிப்பை ஒருசில அர்சியல் கட்சிகள் வரவேற்றும், சில கட்சிகள் எதிர்ப்ப்ம் தெரிவித்துள்ளன.

இந்த இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கடும் கண்டனங்களை தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது:

ஆர்.கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்துள்ளது ஏற்புடையதல்ல. எந்த கட்சியின் வேட்பாளர்கள் ஓட்டுக்கு பணம் கொடுத்தார்களோ, அவர்கள்
தேர்தல் போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும்.” என ஜெ.தீபா தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆனால் தீபா, திமுக வேட்பாளர், ஓபிஎஸ் வேட்பாளர், மற்றும் தினகரன் ஆகிய அனைவருமே ஓட்டுக்கு பணம் கொடுத்துள்ள செய்தி வெளியாகியுள்ளதால் தீபா உள்பட அனைவரையும் போட்டியிட தடை செய்ய வேண்டும் என்பதுதான் உண்மையான நடைமுறை. இது சாத்தியமில்லை என்பதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்

இந்த தேர்தல் ரத்து குறித்து டிடிவி தினகரன் கூறியதாவது: அதிமுக அம்மா அணி தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும் என்பதை அறிந்த சில துரோகிகளின் சூழச்சி தான் இது. திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுக ஆட்சியை கலைக்க முயற்சி செய்து வருகிறர். அதிமுகவை அழிக்க அவருடன் சிலர் சதி செய்து வருகின்றனர். அவர்கள் யார் என்பது விரைவில் தெரியவரும். நான் வெற்றி பெறுவேன் என்று தெரிந்ததால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்ட தொண்டர்களின் உழைப்பு அனைத்தும் வீணாகிவிட்டது’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply