மீண்டும் அதிமுகவில் டிடிடி தினகரன். ஜெயலலிதா ஆன்மா சாபம் இடுமா?
கட்சிக்கு விரோதமாக செயல்பட்டவர்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டு அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஜெயலலிதா நீக்கிய டிடிவி தினகரன் மற்றும் டாக்டர் வெங்கடேஷ் ஆகிய இருவரை இன்று காலை அதிமுகவில் மீண்டும் சேர்த்து கொள்வதாக சசிகலா அறிவித்துள்ளார். இருவரும் தாங்கள் செய்த தவறுகளை எண்ணி வருந்தி நேரிலும் எழுத்து மூலமும் கேட்டுக்கொண்டதால் மீண்டும் கட்சியில் அவர்கள் சேர்த்து கொண்டதாக கூறப்படுகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைக்கு செல்லவுள்ள சசிகலா, தான் சிறையில் இருந்தாலும் கட்சி தனது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர் இருவரையும் கட்சியில் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா நீக்கியவர்களை கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொண்ட சசிகலாவை ஜெயலலிதாவின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது என்றும் தண்டனை பெற்றும் சசிகலா இன்னும் திருந்தவில்லை என்பதால் சசிகலாவுக்கு ஜெயலலிதாவின் சாபம் இடும் என்றும் அதிமுக தொண்டர்கள் டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.