திருவாருரில் டெபாசிட் வாங்க முடியுமா? தினகரன் சவால்
தன்னை எதிர்த்து புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா? என நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிடிவி தினகரனுக்கு சவால்விட்ட நிலையில் இந்த சவாலுக்கு பதில் சவாலை இன்று தினகரன் விடுத்துள்ளார்.
அமைச்சர் விஜயபாஸ்கரின் சவாலுக்கு பதில் சவாலாக, ‘திருவாரூர் இடைத்தேர்தலில் எங்கள் வேட்பாளரை எதிர்த்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிட்டு டெபாசிட் வாங்க முடியுமா? என தினகரன் எதிர்சவால் விடுத்துள்ளார்.
ஏற்கனவே ஆர்.கே.இடைத்தேர்தலில் தினகரனிடம் தோல்வி அடைந்த அதிமுக, தினகரனின் சவாலை ஏற்று திருவாரூர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்