இதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு விடியலா?சொத்து வரி உயர்வுக்கு டிடிவி கண்டனம்,

இதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு விடியலா?சொத்து வரி உயர்வுக்கு டிடிவி கண்டனம்,

தமிழகம் முழுவதும் சொத்து வரியை 100% வரை உயர்த்தியிருக்கிற திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் ட்வீட் செய்துள்ளார். அந்த டுவிட்டில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் சொத்து வரியை 100% வரை உயர்த்தியிருக்கிற தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுதான் நீங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு தரப்போவதாக சொன்ன விடியலா?

கொரோனா பாதிப்புக்குப் பிறகு முழுமையான இயல்புநிலை இப்போதுதான் ஏற்படத்தொடங்கி இருக்கும் நிலையில், இப்படி ஒவ்வொன்றாக மக்கள் தலையில் இடி விழுவது போல் அறிவிப்புகளை வெளியிடுவது மனச்சாட்சி இல்லாத செயல். எனவே, சொத்துவரி உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.