டிடிவி தினகரனுக்கு ஜாமீன். சென்னை திரும்புவது எப்போது?
தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட டி.டி.வி.தினகரனுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி இரவு கைதுசெய்யப்பட்ட டி.டி.வி.தினகரன். விசாரணைக்குப் பின்னர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி, டெல்லி நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தாக்கல்செய்த மனு மீது விசாரணை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் முடிவடைந்து ஜூன் 1ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சற்று முன்னர் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதன்படி டிடிவி தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. இருவரும் ரூ.5 லட்சம் செலுத்தி சொந்த ஜாமீனில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதாகவும், தங்களது பாஸ்போர்ட்டை இருவரும் ஒப்படைக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜாமீன் கிடைத்துவிட்டதால் டிடிவி தினகரன் விரைவில் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.