என்னை யாரும் நீக்க முடியாது! எனக்குத்தான் அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் உண்டு. டிடிவி தினகரன்

என்னை யாரும் நீக்க முடியாது! எனக்குத்தான் அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் உண்டு. டிடிவி தினகரன்

அதிமுகவில் இருந்து தினகரன் நீக்கப்பட்டுவிட்டதாக கூறப்படும் நிலையில் சற்றுமுன்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தினகரன் கூறியதாவது:

அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா தற்போது செயல்பட முடியாத நிலையில் உள்ளதால் துணைபொதுச்செயலாளரான எனக்குத்தான் அனைத்து அதிகாரங்களும் உள்ளது. என்னை ஒருசிலர் நீக்குவதாக கூறுவது அவர்களின் அறியாமையத்தான் காண்பிக்கின்றது.

அமைச்சர்கள், நிர்வாகிகள் உள்பட அனைவரையும் நீக்கும் அதிகாரம் எனக்குத்தான் உள்ளதே தவிரை என்னை நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளரை தவிர வேறு யாருக்கும் இல்லை

அதேபோல் குடியரசு தலைவர் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உண்டு. அவர் விரைவில் இதுகுறித்து முடிவு செய்வார் என்று கூறினார்.

மேலும் கட்சியில் இணைக்கும் பணியில் இதுவரை யாரும் ஈடுபடவில்லை. 60 நாட்கள் கழித்து நானே கட்சியை இணைக்கும் பணியை தொடங்குவேன் என்றும் டிடிவி தினகரன்

Leave a Reply