ஆர்.கே.நகர் வேட்பாளராக டிடிவி தினகரன் போட்டி. அதிகாரபூர்வ அறிவிப்பு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியாகியுள்ள சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சசிகலாவின் உறவினரும் அதிமுகவின் துணை பொதுச்செயலாளராக சசிகலாவால் நியமனம் செய்யப்பட்டவருமான டிடிவி தினகரன் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் தான் முதல்வராக பதவியேற்கபோவதில்லை என்றும், எடப்பாடி பழனிச்சாமியே முதல்வராக தொடர்வார் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த தொகுதியில் ஜெயலலிதா பெற்ற வாக்குகள் அப்படியே அதிமுகவுக்கு கிடைக்கும் என்பதால் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றும் ஜெயலலிதாவின் திட்டங்கள் அனைத்தும் இந்த தொகுதி மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் கூறினார்.