சசிகலாவை ஒட்டுமொத்தமாக ஒதுக்கிய தினகரன்.

சசிகலாவை ஒட்டுமொத்தமாக ஒதுக்கிய தினகரன்.

ஓபிஎஸ் இடம் இருந்து அதிமுகவை கைப்பற்றிய ஒருசில நாட்களில் சசிகலாவுக்கு கெட்ட நேரம் தொடங்கிவிட்டது. கட்சி அவரது கையை விட்டு போனது மட்டுமின்றி சொத்துக்குவிப்பு வழக்கு அவரை சிறையிலும் தள்ளிவிட்டது. சிறையில் இருந்து சசிகலா ஆட்சி செய்கிறார் என்பதெல்லாம் ஒருசில நாட்கள்தான் தற்போது கட்சி கிட்டத்தட்ட தினகரனின் கையில் முழுக்கட்டுப்பாட்டுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

சசிகலா மீது பொதுமக்களுக்கு ஏகப்பட்ட அதிருப்தி இருப்பதால் இனியும் சின்னம்மா பாட்டு பாடினால் எடுபடாது என்றுதான் சசிகலாவை முழுவதும் ஒதுக்க தொடங்கிவிட்டார் டிடிவி தினகரன்

சசிகலாவை மொத்தமாகப் புறக்கணிக்கும் எண்ணத்துக்கு தினகரன் வந்துவிட்டர் என்பதையே அவரது சமீபத்திய நடவடிக்கைகள் காட்டுகின்றன. ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும் தினகரனுக்காக தண்டையார்பேட்டையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மேடையில் ஜெயலலிதா, தினகரன் படங்கள் மட்டும்தான் இருந்தன. சசிகலா படம் இல்லை என்பதே இதற்கு சான்று.

இந்த கூட்டத்தில் தினகரன் பேசியதாவது: ‘1989-ல் இரட்டை இலை சின்னம் தொடர்பாக பிரச்னை வந்தபோது, வழக்கறிஞர்களை சந்திக்கச் சென்ற அம்மா, என்னையும் அழைத்துச் சென்றார். அப்போதே எனக்குப் பயிற்சி கொடுத்துவிட்டார். புரட்சித் தலைவர் மறைந்தபிறகு மூன்று ஆண்டுகள் புரட்சித் தலைவி தனக்குப் பாதுகாவலராக என்னைத்தான் வைத்திருந்தார். 1999 நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முதலாக என்னை அம்மா நேரடியாக அரசியலுக்குக் கொண்டு வந்தார். இந்தத் தேர்தலில் அம்மா அவர்களின் ஆசியோடு என்னை வேட்பாளராக நிறுத்தி இருக்கிறீர்கள். எனக்குத் தெரிந்து இந்த 30 ஆண்டுகளில் பல்வேறு சரித்திரங்கள் திரும்பி இருக்கின்றன. எனது அரசியல் அனுபவத்தில் இதைக் கூறுகிறேன்’ என்று ஒரே அம்மா புராணமாக பேசினார். சசிகலா குறித்து ஒருவார்த்தை கூட பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply