துருக்கி மனிதவெடிகுண்டு எதிரொலி. ஃபேஸ்புக், டுவிட்டருக்கு தடை

துருக்கி மனிதவெடிகுண்டு எதிரொலி. ஃபேஸ்புக், டுவிட்டருக்கு தடை
facebook1
நேற்று துருக்கி தலைநகர் அங்காரா நகரில் 24 வயது இளம்பெண் மனித வெடிகுண்டாக மாறி நடத்திய தாக்குதலில் 34 பேர் பரிதாபமாக பலியானதை அடுத்து அந்நாடு பிரபல சமூகவலைத் தளங்களான பேஸ்புக், மற்றும் டுவிட்டருக்கு அதிரடியாக அரசு தடை விதித்துள்ளது. ஃபேஸ்புக், டுவிட்டர் மூலம் தீவிரவாதிகள் தங்களுக்குள் தொடர்பு வைத்துக்கொண்டு செய்திகளை பரிமாறி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் குர்தீஸ் தீவிரவாதிகள் முகாம்கள் மீது துருக்கி நாட்டின் போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதில் இதில் 50க்கும் அதிகமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கவே இந்த தாக்குதல் நடைபெற்றதாக சமூக வலைத்தளங்களின் மூலம் தீவிரவாதிகள் பரிமாறிய கருத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் ஃபேஸ்புக், டுவிட்டருக்கு துருக்கி அரசு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி அரசின் நடவடிக்கைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் திரித்து செய்திகள் வெளியாகி வருவதாகவும், இதை தடுக்கும் வகையில் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூல வலைத்தளங்களுக்கு அங்காரா கோர்ட் தடை விதித்துள்ளதாகவும் அந்நாட்டு அரசின் உயரதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply