ஃபேஸ்புக், டுவிட்டருக்கு துருக்கி அரசு தடை. அதிரடி நடவடிக்கையால் பொதுமக்கள் அதிர்ச்சி.

turkeyதுருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகர நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞராக பணியாற்றிய வந்த மெஹ்மெட் சலிம் கிராஸ் என்பவர் கடந்த வாரம் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டார். பின்னர் அவரை தீவிரவாதிகள் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொலை செய்து அதன் புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றை தீவிரவாதிகள் தங்கள் இணையதளத்தில் பதிவு செய்தனர்.

இந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் ஏராளமான அமைப்புகள் சமூக வலைத்தளங்கள் மூலம் வெளியிட்டதால் துருக்கியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.,  மேற்கண்ட புகைப்படங்களை வெளியிட்டு மக்களிடம் அச்ச உணர்வை ஏற்படுத்திய 166 இணையதளங்களை துருக்கி அரசு அதிரடியாக முடக்கியுள்ளது. மேலும் ஃபேஸ்புக், டுவிட்டர், யூடியூப், போன்ற சமூக வலைத்தளங்களை உடனே தடை செய்யுமாறு அங்குள்ள இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு நேற்று துருக்கி அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு காரணமாக துருக்கியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தடை காரணமாக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply