எங்கள் நெற்றியில் முட்டாள் என்றா எழுதி ஒட்டியிருக்கின்றது? ஐரோப்பிய நாடுகள் மீது துருக்கி அதிபர் காட்டம்

எங்கள் நெற்றியில் முட்டாள் என்றா எழுதி ஒட்டியிருக்கின்றது? ஐரோப்பிய நாடுகள் மீது துருக்கி அதிபர் காட்டம்
To match Special Report TURKEY-ERDOGAN/
ஈராக் மற்றும் சிரியா நாடுகளுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகளுக்கும் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான போர் நடைபெற்று வருவதால் லட்சக்கணக்கான ஈராக் மற்றும் சிரியா மக்கள் அகதிகளாக அருகில் உள்ள நாடான துருக்கியில் தஞ்சம் அடைந்துள்ளனர். துருக்கியில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகள் ஆபத்தான பயணம் செய்து வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து இதுகுறித்து ஆலோசனை செய்ய  ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் மாநாடு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் துருக்கியிலிருந்து அகதிகளை ஏற்றி வரும் கடத்தல்காரர்களை ஒடுக்குவதற்காக நேட்டோ படைக் கப்பல்களை துருக்கியின் ஏஜியன் கடல் பகுதியில் நிறுத்த ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்தன. நடுக்கடலில் அகதிகளை வழிமறித்து மீண்டும் துருக்கி நாட்டிற்கே அனுப்பி வரும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் ஆத்திரமடைந்துள்ள துருக்கி, “அகதிகள் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் எங்களை ஏமாளியாகக் கருதினால், எங்கள் நாட்டில் தங்கியுள்ள லட்சக் கணக்கான அகதிகளை ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பிவிடுவோம்’ என்று மிரட்டியுள்ளது. இந்த மிரட்டலை துருக்கி அதிபர் ரிùஸப் தாயிப் எர்டோகன் நேரடியாகவே விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
.
துருக்கி தலைநகர் அங்காராவில் சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் துருக்கி அதிபர் எர்டோகன், இதுகுறித்து மேலும் கூறியதாவது: ஐரோப்பிய நாடுகளை நான் அவ்வாறு மிரட்டியதில் தவறில்லை. நமது நெற்றியில் “முட்டாள்’ என்று எழுதி ஒட்டியிருக்கவில்லை. நம்மாலும் ஓரளவுவரைதான் பொறுமை காக்க முடியும். அகதிகள் மட்டுமின்றி, துருக்கியின் உரிமைக்காகவும் நாம் போராட வேண்டும். அகதிகளைப் பராமரிப்பதற்காக 303 கோடி டாலர் (ரூ.20,600 கோடி) தருவதாகக் கூறிய ஐரோப்பிய யூனியன், இதுவரை அந்தத் தொகையை அளிக்கவில்லை என்று ஆவேசமாக பேசினார்.

Leave a Reply