ரஷியாவிடம் மன்னிப்பு கேட்க முடியாது. துருக்கி திட்டவட்டம்

ரஷியாவிடம் மன்னிப்பு கேட்க முடியாது. துருக்கி திட்டவட்டம்

turkeyதங்கள் நாட்டு எல்லையில் ரஷ்யாவின் போர் விமான பறந்ததாகவும், பலமுறை எச்சரிக்கை விடுத்த பின்னர் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும் துருக்கி நாடு கூறி வரும் நிலையில், ரஷ்யா-துருக்கி இடையே பனிப்போர் முற்றியுள்ளது.

இந்த பிரச்சனையில் ரஷ்யா, துருக்கி ஆகிய இரு நாடுகளும் அமைதியாக இருக்கவேண்டும் என்று ஐ.நா. சபை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் உள்பட பல நாடுகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் துருக்கி மீது பொருளாதார தடை விதிக்க ரஷியா முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து முடிவு செய்ய ரஷ்ய மந்திரிசபை நேற்று மாஸ்கோவில் அவசரமாக கூடியதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மந்திரிசபை கூட்டத்துக்கு பின்னர், மாஸ்கோவில் நிருபர்களிடம் பேசிய ரஷ்ய பிரதமர் மெத்வடேவ், ‘இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு பதிலடி தருகிற விதத்தில் பொருளாதாரம் மற்றும் மனிதாபிமான வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை ஆராயுமாறு அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என கூறினார்.

இதற்கிடையே விமானத்தை சுட்டு வீழ்த்திய விவகாரத்தில் ரஷியாவிடம் மன்னிப்பு கேட்க முடியாது என துருக்கி திட்டவட்டமாக அறிவித்துள்ளது. “இது குறித்து மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் செய்தது சரிதான்” என்று துருக்கி நாட்டின் வெளியுறவு மந்திரி மெவ்லுட் கவுசோக்லு கூறியுள்ளார். இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான பதட்டம் அதிகரித்து வருகிறது.

English Summary: Turkey Refuses To Apologise For Downing Jet

Leave a Reply