ராணுவ புரட்சி எதிரொலி. துருக்கி சென்றுள்ள தமிழக மாணவர்களின் நிலை என்ன?
துருக்கியில் திடீரென ராணுவ புரட்சி நடந்ததால் ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 60 பேர் வரை மரணம் அடைந்துள்ளதாக் அதிர்ச்சிக்குரிய செய்தி வெளிவந்துள்ளது. துருக்கியில் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழ்வதால் அவர்களுடைய பாதுகாப்பு குறித்து அவர்களது உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்க தமிழக மாணவர்கள் சமீபத்தில் துருக்கி சென்றுள்ளனர். இவர்களுடைய பாதுகாப்பு குறித்து அவர்களது பெற்றோர் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு :
பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக துருக்கி சென்றுள்ள இந்திய மாணவர்கள் குழுவில் தமிழக மாணவர்கள் பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் துருக்கியில் உள்ள ட்ராப்சோன் என்ற இடத்திற்கு சென்றுள்ளனர்.
துருக்கியில் திடீரென்று ஏற்பட்ட ராணுவப் புரட்சியின் காரணமாக, அங்குள்ள மாணவர்களின் பாதுகாப்பு குறித்து ஊடகங்களில் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து துருக்கியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, மாணவர்களின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவி ட்டார்.
முதல்வரின் உத்தரவுப்படி அதிகாரிகள் தொடர்பு கொண்டு கேட்டதில் மாணவர்கள் அனைவரும் டிராப்சோனில் பாதுகாப்பாக உள்ளதாகவும், விளையாட்டுப் போட்டிகள் அன்று முடிவடைந்ததும் அவர்கள் அனைவரும் பத்திரமாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனவே விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்க துருக்கி சென்றுள்ள தமிழக மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அவர்களது பெற்றோர் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.