நெருப்புடன் விளையாட வேண்டாம். ரஷ்யாவுக்கு துருக்கி எச்சரிக்கை

நெருப்புடன் விளையாட வேண்டாம். ரஷ்யாவுக்கு துருக்கி எச்சரிக்கை

turkeyகடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஷ்யாவின் போர் விமானம் ஒன்றை துருக்கி சுட்டு வீழ்த்தியதை அடுத்து ரஷ்யா-துருக்கி போர் மூளும் அபாயம் எழுந்துள்ளது. இந்நிலையில் துருக்கி தொழிலதிபர் ஒருவர் ரஷ்யாவில் தடுத்து நிறுத்தப்பட்டதால் கடும் ஆத்திரம் அடைந்த துருக்கி அதிபர் ‘நெருப்புடன் விளையாட வேண்டாம்’ என ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யாவின் தற்போது விசா நடைமுறையில் அதிக கட்டுப்பாடுகள் ஏற்படுத்தியுள்ளதாகவும், எனவே துருக்கி தொழிலதிபர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ள துருக்கி அதிபர் டைய்யிப் ஈர்டோகன் தங்கள் நாட்டு குடிமகன் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து, நெருப்புடன் விளையாடாதீர்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள பருவநிலை மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக துருக்கி அதிபர் கூறியுள்ளார். ஆனால் ரஷ்ய அதிபர் துருக்கி அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர்க்க முயல்வதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

English Summary: Turkey warns Russia not to ‘play with fire’ over downed jet

Leave a Reply