ரஷ்ய தொலைக்காட்சி நடிகையின் ஆபாச படங்களை இண்டர்நெட்டில் வெளிப்படுத்திவிடுவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்ற மர்ம நபர்களை ரஷ்ய போலீஸார் தேடி வருகின்றனர்.
பிரபல ரஷ்ய தொலைக்காட்சி நடிகைக்கு சமீபத்தில் ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் தன்னிடம் நடிகையின் ஆபாச படங்கள் இருப்பதாகவும், 1 மில்லியன் ரஷ்ய ரூபிள்கள் பணம் கொடுக்காவிட்டால் அதை இண்டர்நெட்டில் பதிவு செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
தொலைக்காட்சி நடிகை இந்த மிரட்டலுக்கு பயப்படாமல் உடனடியாக காவல்துறையினர்களை தொடர்பு கொண்டு தனக்கு வந்த மிரட்டல் கடிதம் குறித்து புகார் செய்தார். அவர் புகார் செய்த ஒரு மணி நேரத்தில் அவருக்கு நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகள் வந்தன. நடிகையின் ஆபாச படங்கள் இணையத்தில் வந்துள்ளதாகவும் அதை பார்த்து தாங்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும் அவரது மகள் உள்பட பலர் தெரிவித்தனர்.
மர்ம தொலைபேசியில் பேசியவர் மிரட்டல் மட்டுமே கொடுப்பார் என்று எதிர்பார்த்த தனக்கு இது ஒரு பெரும் அதிர்ச்சியாக இருந்தது என்றும், தன் குடும்பத்தினர்களே தன்னை அறுவறுப்பாக பார்ப்பதை தன்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ரஷ்ய போலீஸார் மர்ம மனிதனை தேடி வருகின்றனர்.