பிரபல இந்தி டிவி நடிகை பிரதியுஷா தற்கொலை. காதலர் காரணமா?

பிரபல இந்தி டிவி நடிகை பிரதியுஷா தற்கொலை. காதலர் காரணமா?
TV actress Pratyusha Banerjee
பிரபல இந்தி டிவி நடிகை பிரதியுஷா பானர்ஜி  நேற்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 24

இந்தி தொலைக்காட்சி ஒன்றில் Balika Vadhu‬ என்ற தொடரில் ஆனந்தி என்ற கேரக்டரில் நடித்து வந்த பிரபல நடிகை பிரதியுஷா நேற்று மாலை அவருடைய இல்லத்தில் உள்ள மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்கு மாட்டி மரணம் அடைந்தார்.  இதுகுறித்து தகவல் அறிந்த மும்பை போலீஸார் உடனடியாக பிரதியுஷாவின் இல்லத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பிரதியுஷா எழுதிய கடிதம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவரது மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதியுஷாவின் தாய் சோமா பானர்ஜி இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘பிரதியுஷாவும் நானும் கண்டிவலியில் ஒன்றாக வாழ்ந்துவந்தோம். ஆனால் ஜனவரி 12 அன்று அவளுடைய காதலர் ராகுல் என்னிடம் வந்து அவளை அழைத்துச் செல்வதாகவும் இருவரும் மாலட் பகுதியில் வசிக்கப் போவதாகவும் கூறினார். மகளும் என்னை ஜம்ஷெட்பூருக்குப் போகச் சொன்னார். அங்குதான் எங்கள் வீடு உள்ளது. 2 நாள்களுக்கு முன்பு அவள், தன் தந்தையிடம் பேசியுள்ளார். அப்போது தன் வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளதாகக் கூறியுள்ளார். வியாழன் அன்று என்னிடம் பேசியபோது, சோகமாகப் பேசினாள். என் மகளின் மரணத்துக்கு ராகுலே காரணம். என் மகள் ராகுலுடனான உறவில் மகிழ்ச்சியில்லாமல் இருந்தாள் என்று கூறினார்.

பிரதியுஷா மரணம் குறித்து அவரது காதலர் ராகுலிடம் போலீஸார் விசாரணை செய்யவுள்ளதாகவும், விசாரணைக்கு பின்னரே அவரது மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Chennai Today News: TV actress Pratyusha Banerjee commits suicide

Leave a Reply