டுவிட்டரில் இனி 10,000 எழுத்துக்கள் பதிவு செய்யலாம்.

twitterசுட்டுரை (டுவிட்டர்) இணையதளப் பதிவுகளில் வெளியிடப்படும் எழுத்துகளின் எண்ணிக்கை வரம்பை 140-இல் இருந்து 10,000 என்ற அளவுக்கு அதிகரிக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்தப் புதிய திட்டத்தை, வரும் மார்ச் மாதத்தில் இருந்து அமல்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தொழில்நுட்பத் தகவல்களை வழங்கி வரும் “டெக்நியூஸ்’ என்ற இணையதளம் தெரிவிக்கிறது. தனிநபர்கள் பகிரும் தகவல்கள், அரசியல் தலைவர்களின் கருத்துகள், விளம்பரங்கள், புகைப்படம், விடியோக்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் சுட்டுரையில் வெளியாகின்றன. நாளொன்றுக்கு சுமார் 30 கோடி பேர் சுட்டுரை இணையதளத்தைப் பயன்படுத்துகின்றனர்.

அதேவேளையில், 140 எழுத்துகளுக்குள் பதிவுகளை முடித்துக் கொள்ளும் வகையிலேயே சுட்டுரை இணையதளத்தின் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தங்களது தகவல்களை கூடுதல் விவரங்களுடன் பதிவு செய்ய கூடுதல் எழுத்துகளை சுட்டுரை அனுமதிக்க வேண்டும் என பயன்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒரு சுட்டுரைப் பதிவில் 10,000 எழுத்துகளை அனுமதிக்கும் நோக்கில் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தும் பணியை சுட்டுரை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

Leave a Reply