இயற்கை சீற்றம் போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் எச்சரிக்கை தகவல்களை டுவிட்டர் அனுப்ப உள்ளது. இதற்காக ‘டுவிட்டர் அலார்ட்’ சேவையை தொடங்கி உள்ளது. பிரபல சமூக மீடியா டுவிட்டர், பரஸ்பரம் பலரும் பரிமாறிக்கொள்ளும் மெசேஜ் களமாக இருந்து வருகிறது. அரசியலில் ஆரம்பித்து தனிப்பட்ட தகவல்களையும் பரிமாறிக்கொள்ள இது வழியமைத்து தந்துள்ளது.
இப்போது டுவிட்டர் அலார்ட் என்ற புது சேவையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா உட்பட சில நாடுகளில் இயற்கை சீற்றம் போன்ற சூழ்நிலைகளில் எச்சரிக்கை மெசேஜ் தரும் சேவையை செய்யும் டுவிட்டர், எச்சரிக்கை தகவல்களை பரஸ்பரம் தாங்களாகவே பரிமாறிக் கொள்ளும் வகையில் உலகளாவிய சேவையை நேற்று ஆரம்பித்துள்ளது.
‘கடந்தாண்டு லைப்லைன் என்ற பெயரில் ஜப்பானில் எமர்ஜென்சி அக்கவுன்ட்ஸ் மூலம் அவசரகால தகவல்களை பரிமாறிக்கொள்ள வழி செய்தோம். இதே பாணியில் இப்போது டுவிட்டர் அலார்ட் என்ற பெயரில் உலக முழுவதும் பயனளிக்கும் வகையில் ஏற்படுத்தியுள்ளோம். சட்டம் ஒழுங்கு பராமரிக்கும் போலீஸ், பொதுமக்கள் பாதுகாப்பு ஏஜென்சிகள், அவசரகால சேவை அமைப்புகள், செஞ்சிலுவை போன்ற அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்றவை இதை பயன்படுத்தி பொதுமக்களுக்கு , அவ்வப்போது தேவையான எச்சரிக்கை தகவல்களை தரும் என்று நம்புகிறோம்.
மேலும், டுவிட்டர் அக்கவுன்ட் வைத்துள்ளவர்களுக்கு போனிலும் தகவல்களை இந்த அமைப்புகள் சொல்லவும் தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டிவி, ரேடியோ போன்ற தகவல்தொடர்பு சாதனங்கள், மின்சார துண்டிப்பு போன்றவை ஏற்படும் போது டுவிட்டர் அலார்ட் சேவை பயன்படும்’ என்று கூறினார்.