சமூக வலைத்தளம் என்றாலே ஃபேஸ்புக்,டுவிட்டர் ஆகிய இரண்டும்தான் முதலில் ஞாபகம் வரும். அதிலும் சுருக்கமாக இரண்டே வரிகளில் திருக்குறள் போல ஸ்டேட்டஸ் போடப்பட்டு வரும் டுவிட்டரில் உலகம் முழுவதும் சுமார் 302 மில்லியன் பயனாளர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மோடி முதல் சாதாரண குடிமகன் வரை டுவிட்டரில் கணக்கு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இத்தனை ஆண்டுகாலமாக வெற்றி நடைபோட்டு வந்த டுவிட்டரின் முன்னேற்றத்திற்கு பெரிதும் காராணமான இருந்த அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இதுவரை பணிபுரிந்து வந்த டிக் கோஸ்டோலோ என்பவர் பணியில் இருந்து திடீரென விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கடந்த ஒரு ஆண்டுகாலமாக டுவிட்டர் அலுவலகத்தில் பல முக்கிய அதிரடி மாற்றங்களை கொண்டு வந்த அவர், சமீபத்தில் தன்னை தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு நிர்வாக குழுவை நேற்று கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு எவ்வித மறுப்பும் தெரிவிக்காத நிர்வாகக்குழு உடனடியாக அவருடையை கோரிக்கையை ஒப்புக்கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஜூலை 1ஆம் தேதி தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விலகவுள்ள டிக் கோஸ்டோலோ என்பவருக்கு பதிலாக இடைக்கால புதிய தலைமை செயல் அதிகாரியாக ஜேக் டோர்சீ செயல்பாடுவார் என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை மாறுகிறது என்ற அறிவிப்பு வெளியானவுடன் டுவிட்டரின் பங்குகள் 7 சதவீத உயர்வை சந்தித்தது. தற்போது 302 மில்லியன் பயனாளர்கள் டுவிட்டரில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.