தோற்றத்தை மாற்றியது டுவிட்டர்
உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டர் சமூக வலைத்தளத்தின் தோற்றத்தில் ஒருசில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் டுவிட்டர் பயனாளிகளை திருப்திபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறாது.
ட்விட்டர் சமூக வலைத்தள நிறுவனம் தனது இணையதளத்தின் தோற்றத்தை சிறு சிறு மாற்றங்களுடன் புதுமையாக்கியுள்ளது. மொபைல், டேப்லெட் மற்றும் கம்ப்யூட்டர்களுக்கான இணையதளம் மற்றும் அப்ளிகேஷன் தோற்றமும் மாறிவிட்டன. குறிப்பாக டுவிட்டர் ஐகான்கள் மாறிவிட்டன. ப்ரொஃபைல் படம் சதுர வடிவில் இருந்து வட்டமாக மாறியுள்ளது. மேலும் இந்த மாற்றங்கள் பெரிதாக எதையும் அளிக்கவில்லை என்றாலும் உலகம் முழுவதும் டிரெண்ட் ஆகியுள்ளது.
இந்நிலையில், ட்ய்விட்டரின் தனியுரிமை கொள்கைகளும் நிபந்தனைகளும் வரும் ஞாயிறு முதல் அதாவது ஜூன் 18, 2017 முதல் மாற்றம் செய்யப்படுகின்றன. மேலும் டுவிட்டரில் லைவ் வீடியோக்களைத் தொகுத்து முகப்புப் பக்கத்தில் இடம்பெறச் செய்யும் திட்டத்தையும் டுவிட்டர் அறிமுகப்படுத்தவுள்ளது.