புதிய பயனாளிகளை டுவிட்டர் ஈர்க்காதது ஏன்?
சமூக வலைத்தளங்களில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ஃபேஸ்புக் 150 கோடி பயனாளர்களைக் கொண்டுள்ள நிலையில் டுவிட்டர் தற்போது வரை கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான இறுதிக் காலாண்டில் டுவிட்டர் வலைதளம் 32 கோடி பயனாளர்களையே கொண்டுள்ளது.
அதுமட்டுமின்றி அதற்கு முந்தைய காலாண்டிலும் இதே எண்ணிக்கையில்தான் டுவிட்டர் இணையதளம் வைத்துள்ளது என்றும், இந்த கடைசி காலாண்டில் எந்தவொரு முன்னேற்றமும் அந்த தளத்தில் இல்லை என்றும் அதன் நிதிநிலை அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
எனவே புதிய பயனாளிகளை கவர அதிரடி சேவைகளில் மாறுதலை செய்ய வேண்டிய நிலைக்கு அந்த வலைதளம் தள்ளப்பட்டுள்ளது. டுவிட்டரில் ஒரு குறிப்பிட்ட அளவு சொற்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் இந்த இணையதளம் புதிய பயனாளிகளை கவர முடியவில்லை என்பதும் ஒரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஏற்கனவே டுவிட்டரில் உள்ளவர்கள் எப்போதும்போல் செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.