மன்னிப்பு கேட்ட பினராயி விஜயன் எங்கே? மூளை அலர்ஜி என்று மாற்றி கூறும் யோகி எங்கே?

மன்னிப்பு கேட்ட பினராயி விஜயன் எங்கே? மூளை அலர்ஜி என்று மாற்றி கூறும் யோகி எங்கே?

உத்தரபிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் சப்ளை திடீரென நிறுத்தப்பட்டதால் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்ததற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காமல், பலியான குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆறுதல் மற்றும் நிவாரணம் செய்யாமல், தன்னுடைய ஆட்சியை காப்பாற்ற முதல்வர் யோகி அதிரடியாக ஆக்சிஜன் சப்ளை செய்த நிறுவனத்தின் மீதும், மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருவதாக டுவிட்டர் பயனாளிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

முருகன் மறைவிற்கு மன்னிப்பு கேட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன் எங்கே? குழந்தைகள் “மூளை அலர்ஜி”யால் இறந்தார்கள்னு சொல்ற யோகி கூறுவது எங்கே? என்று ஒரு டுவிட்டர் பயனாளி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ஒருசில ஊடகங்கள் முதலில் ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டதால் குழந்தைகள் பலியானதாக செய்தி வெளியிட்டன. ஆனால் ‘கவனிப்பு’ நடந்த பின்னர் அதே ஊடகங்கள் மூளை அலர்ஜியால் குழந்தைகள் பலியாகியதாக மாற்றி செய்திகள் வெளியிட்டுள்ளன. இதற்கும் டுவிட்டர் பயனாளிகள் ஆதாரத்துடன் அவர்களது சுயரூபத்தை வெளிப்படுத்தி கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply