மலேசிய விமானம் MH370ல் பயணியின் 13 வயது மகன் வழக்கு.

mh 370
கடந்த மார்ச் மாதம் மாயமான மலேசிய விமானம் MH370ல் பயணித்த தன் தந்தை தொடர்பாக இதுவரை மலேசிய ஏர்லைன்ஸ் எந்த விதத் தகவலும் தெரிவிக்கவில்லை என்று கூறி மலேசியாவைச் சேர்ந்த இரு சிறுவர்கள் மலேசிய ஏர்லைன்ஸ் நிர்வாகத்திற்கு மலேசிய அரசுக்கு எதிராக  வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மலேசிய விமானம் MH 370, மாயமாகி 8 மாதங்கள் ஆகிறது. அந்த இந்த விமானத்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் பயணிகளின் உறவினர் ஒருவர் முதல் முறையாக மலேசிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

13 வயது ஜீ கின்சன் மற்றும் 11 வயது ஜே கின்லாண்ட் ஆகிய இருவரும் நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறையின் மெத்தனம் மற்றும் அக்கறையின்மை குறித்து தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். கடந்த மார்ச் 8ம் தேதி கோலாலம்பூரில் இருந்து பீஜிங் சென்று கொண்டிருந்த விமானம் குறித்து குறிப்பிட்ட அந்த நேரத்துக்குள் தொடர்பு கொண்டு காப்பாற்ற வழியிருந்தும் கோட்டை விட்டதாகவும் அந்த மனுவில் சிறுவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

8 மாதங்கள் பொறுத்துவிட்டோம். நிபுணர்கள் பலரிடம் பேசியபிறகு, வழக்கு போட முகாந்திரம் இருப்பதை உணர்ந்து கொண்டுதான் வழக்கு தொடர்ந்துள்ளோம். இவ்வளவு தொழில் நுட்பம் வளர்ந்துள்ள இந்தக் காலத்தில், ஒரு பெரிய விமானம் மறைந்து போய்விட்டது என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிபிட்டுள்ள அந்த சிறுவர்கள், தங்கள் மன உளைச்சலுக்கும், ஆதரவின்மைக்கும், தங்கள் தந்தை ஜீ ஜிங் ஹாங் இல்லாமல் தாங்கள் வலியுடன் வாழ்ந்து வரும் நிலைக்குமாகக் கூறி, தங்கள் தந்தை பார்த்து வந்த இணைய தொழில் மூலம் மாதந்தோறும் கிடைத்த 17 ஆயிரம் ரிங்கிட் வருமானம் போனதாகவும் கூறி இந்த வழக்கை அவர்கள் தொடர்ந்துள்ளனர்.

இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் 3ல் 2 பங்குக்கும் அதிகமானோர் சீனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply