அமெரிக்காவில் அடுத்தடுத்து உள்ள இரண்டு செல்போன் டவர்கள் கீழே விழுந்த விபத்தினால் 3 பேர் பரிதாபமாக உடல்நசுங்கி பலியாகினர்.
அமெரிக்காவில் உள்ள மேற்கு விர்ஜினியா அருகே, கிளர்க்ஸ்பெக் என்னும் பகுதியில் உள்ள ஒரு செல்போன் டவரில் பழுதடைந்த பழைய பாகங்களை மாற்றும் பணியில் இரண்டு பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். 60 அடி உயரத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த போது திடீரென அந்த செல்போன் டவர் கீழ்நோக்கி சரிய தொடங்கியது. அந்த டவரில் பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர்கள் டவரின் கோபுரத்தோடு இடுப்பு பெல்ட் அணிந்திருந்ததால், கீழே குதிக்கவும் வழியின்றி டவரின் அடியில் உடல்நசுங்கி பலியானார். மேலும் கீழே விழுந்த செல்போன் டவர் அருகில் இருந்த மற்றொரு டவரின் மீது மோதியதால் அந்த செல்போன் டவரும் கீழே விழுந்தது.
அடுத்தடுத்த இரண்டு செல்போன் டவர்கள் சரிந்து விழுந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுவரை இந்த விபத்தில் 3 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.