இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்லும் இந்தியர்கள் பலர் பலவித சாதனைகளை செய்து பிறந்த நாட்டிற்கு பெருமை தேடி தருகின்ற நிலையில் இந்திய மாணவர் ஒருவர் அமெரிக்காவில் நடைபெற்ற ஸ்பெல்லிங் பீ என்ற போட்டியில் இரண்டாவது முறையாக தொடர்ந்து வெற்று பெற்று சுழற்கோப்பையை கைப்பற்றி சாதனை புரிந்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள மாணவ-மாணவியரின் எழுத்துகூட்டி வாசிக்கும் வாசிப்புத்திறனை மேம்படுத்த அங்கு வருடந்தோறும் ஸ்பெல்லிங் பீ என்ற போட்டி நடத்தப்பட்டு வருகின்றது. இவ்வாண்டு நடைபெற்ற இந்த போட்டியில் கலந்து கொள்ள சுமார் ஒரு கோடியே 10 லட்சம் மாணவ-மாணவியர் விண்ணப்பம் செய்தனர். ஆனால் இறுதிச்சுற்றுக்கு 285 பேர் மட்டுமே தேர்வாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவின் மிசவுரியை பூர்வீகமாக கொண்ட கோகுல் வெங்கடாசலம் என்ற மாணவர் வெற்றி பெற்றுள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற போட்டியிலும் இவரே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்திய வம்சாவளி மாணவி வான்யா சிவசங்கர் அவர்களுடன் இந்த சுழற்கோப்பையையும், பரிசுத்தொகையான 38 ஆயிரம் டாலர் பணத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஆங்கில மொழியையே தாய்மொழியாக பெற்றுள்ள அமெரிக்க மாணவர்களின் மத்தியில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய வம்சாவளி மாணவ-மாணவியரே இந்த போட்டியில் அதிக அளவில் வெற்றி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது