இங்கிலாந்து அமைச்சரவையில் இரண்டு இந்தியர்களுக்கு அமைச்சர் பதவி

இங்கிலாந்து அமைச்சரவையில் இரண்டு இந்தியர்களுக்கு அமைச்சர் பதவி

ஒரு காலத்தில் இந்தியர்களை இங்கிலாந்து நாட்டினர் ஆண்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது இங்கிலாட்ந்து அமைச்சரவையில் இந்தியர்கள் பங்கு பெற்று அந்நாட்டை ஆண்டு வருகின்றனர்

ஆம், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, இரண்டு இந்தியர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளார். ரிஷி சுனக். மற்றொருவர் சுயல்லா பெர்னாண்டஸ் ஆகிய இரண்டு இந்தியர்கள் தற்போது இங்கிலாந்து நாட்டின் அமைச்சர்களாகி உள்ளனர்.

37 வயதான ரிஷி சுனக் இங்கிலாந்தில் பிறந்தவர். ‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன். நாராயண மூர்த்தியின் மகள் அக்‌ஷதாவை திருமணம் செய்து கொண்டு உள்ளார். இவர் ரிச்மாண்ட் தொகுதி எம்.பி. ஆவார். இவருக்கு வீட்டு வசதித்துறை, உள்ளாட்சித்துறை வழங்கப்பட்டு உள்ளது.

37 வயதான சுயல்லா பெர்னாண்டசும் இங்கிலாந்தில் பிறந்தவர்தான். கோவாவை பூர்வீகமாக கொண்ட பெண் தலைவரான இவர் பார்ஹாம் தொகுதி எம்.பி. ஆவார். இவருக்கு ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது தொடர்பான துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.

இவர்கள் இருவரும் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பாக நடந்த பொதுவாக்கெடுப்பின்போது, அதற்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்தவர்கள் ஆவார்கள்.

Leave a Reply