தொழில்நுட்ப துறையில் உலக பணக்காரர்கள் பட்டியல். தமிழகத்தின் ஷிவ்நாடாருக்கு 17வது இடம்

தொழில்நுட்ப துறையில் உலக பணக்காரர்கள் பட்டியல். தமிழகத்தின் ஷிவ்நாடாருக்கு 17வது இடம்

ShivNadarஉலக அளவில் தொழில்நுட்ப துறையில் சாதனை புரிந்த பணக்காரர்கள் குறித்த பட்டியல் ஒன்றை கடந்த சில நாட்களாக ஃபோர்ப்ஸ் ஊடகம் எடுத்து வந்த நிலையில் இன்று அதன் முடிவுகள் வெளியாகியுள்ளது. 100 பேர் கொண்ட இந்த பட்டியலில் தமிழக தொழிலதிபரும் HCL நிறுவனருமான ஷிவ்நாடார் மற்றும் விப்ரோ நிறுவனத் தலைவர் அசிம் பிரேம்ஜி, ஆகியோர் இடம்பெற்று அசத்தியுள்ளனர்.

இந்த பட்டியலில் அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 7,800 கோடி டாலர் (ரூ.5.15 லட்சம் கோடி) நிகர சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். மேலும் இந்த பட்டியலில் ஐந்து பெண்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் 460 கோடி டாலர் நிகர சொத்து மதிப்புடைய லென்ஸ் டெக்னாலஜீஸ் நிறுவனர் ஜூ குன்ஃபே, எபிக் சிஸ்டம்ஸ் நிறுவனர் ஜூடி ஃபாக்னர் (270 கோடி டாலர்/ 79-ஆவது இடம்), ஹியூலட் பேக்கார்டு (எச்பி) தலைமைச் செயல் அதிகாரி மெக் விட்மன் (220 கோடி டாலர்/93-ஆவது இடம்) அடங்குவர். ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள 100 பேரில் 50க்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்கர்கள் என்பதுடன் முதல் 10 பேரில் 8 பேர் அந்நாட்டைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை பொருத்தவரை விப்ரோ நிறுவன தலைவர் அசிம் பிரேம்ஜி 1,600 கோடி டாலருடன் (ரூ.1.05 லட்சம் கோடி) 13ஆவது இடத்திலும், எச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார் 1,160 கோடி டாலர் நிகர சொத்து மதிப்பைக் கொண்டு 17-ஆவது இடத்திலும் உள்ளார். மேலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களான சிம்பொனி டெக்னாலஜியின் தலைமைச் செயல் அதிகாரி ரமேஷ் வாத்வாணி (நிகர சொத்து மதிப்பு 300 கோடி டாலர்) மற்றும் ஐ.டி. கன்சல்டிங்-அவுட்சோர்ஸிங் நிறுவனமான சின்டெல் அதிபர்கள் பரத் தேசாய் மற்றும் அவரது மனைவி நீரஜா சேத்தி ஆகியோரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Leave a Reply