ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் பெயர்கள் அறிவிப்பு
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து கர்நாடக அரசு சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்திருக்கும் நிலையில் இன்று இந்த விசாரணையை மேற்கொள்ளவிருக்கும் நீதிபதிகள் குறித்த அறிவிப்பை சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், ஆர்.கே.அகர்வால் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை செய்யும் என சுப்ரீம் கோர்டி இன்று அறிவித்துள்ளது.
இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தன்னுடைய மேல்முறையீட்டு மனுவில் கூடுதலாக 400 பக்கங்கள் கொண்ட ஆதாரங்களை இணைத்துள்ளதாக தகவல்கள் கூஉறுகின்றன.