கடந்த சில தினங்களுக்கு முன்னர் உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பெண்களின் பட்டியலை பிரபல போர்ப்ஸ் பத்திரிகை எடுத்தது. இந்த பட்டியலில் ஆறு இந்திய பெண்கள் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் பணக்கார பெண்கள் பட்டியல் ஒன்று அதே போர்ப்ஸ் பத்திரிகை எடுத்துள்ளது. இதிலும் இரண்டு இந்திய பெண்கள் இடம்பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரஜா சேத்தி, ஜெய்ஸ்ரீ உலால் ஆகிய 2 பெண்கள் அமெரிக்காவின் பணக்கார பெண்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவருமே எந்தவித தொழில் பின்னணியும் இல்லாமல் தங்களுடைய சொந்த முயற்சியினால் தொழிலதிபராக முன்னேறி பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் 110 கோடி டாலர் சொத்து மதிப்புடன் இப்பட்டியலில் 14-வது இடத்தில் உள்ளார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரஜா சேத்தி. லண்டனில் பிறந்த இந்திய வம்சாவளியினரான ஜெயஸ்ரீ உலால் 47 கோடி டாலர் சொத்து மதிப்புடன் பட்டியலில் 30-வது இடத்தில் உள்ளார்.
இந்த பட்டியலில் $4.5 பில்லியன் சொத்து மதிப்புள்ள எலிசபெத் ஹோம்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக பியான்ஸ் மற்றும் மாரிஸ்ஸா மாயர் ஆகியோர் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.