ரயில் கொள்ளை வழக்கில் சிக்கிய 2 கொள்ளையர்கள். சிபிசிஐடி அதிரடி
சேலத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்த வங்கிப் பணம் கடந்த 8ஆம் தேதி கொள்ளையடிக்கப்பட்டு 10 நாட்கள் கடந்துள்ள நிலையில் இரண்டு கொள்ளையர்களை சிபிசிஐடி போலீஸார் பிடித்துள்ளதாகவும், மீதி கொள்ளையர்கள் வலைவீசி தேடப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
ரயில்வே போலீஸாரிடம் இருந்து சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில் அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக கொள்ளையர்கள் குறித்து துப்பு துலங்கியது. செல்போன் பேச்சுகள் மற்றும் சிக்னல்களை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் வடமாநிலத்தைச் சேர்ந்த 5 பேர்தான் கொள்ளையர்கள் என்பதை நேற்று சிபிசிஐட் போலீசார் உறுதி செய்தனர். இந்நிலையில் வடமாநில இளைஞர்கள் 2 பேரை சேலத்தில் பிடித்துள்ளதாகவும், அவர்களை ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
2 பேர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் விரைவில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் மீட்கப்படுவதோடு இதுகுறித்து அனைத்து மர்மங்களும் வெளிச்சத்துக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
ரயில் கொள்ளையில் முக்கிய துப்பு. வடமாநில கொள்ளையர்களின் கைவரிசையா?