கட்சி, சின்னம் தயார். விரைவில் சசிகலாவுக்கு எதிராக அரசியலில் குதிக்கிறார் தீபா?
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்தவுடன் அவர் வகித்து வந்த முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வமும், பொதுச்செயலாளர் பதவியை சசிகலாவும் ஏற்றனர். அதிமுக நிர்வாகிகள் சசிகலாவை அடுத்த தலைவராக ஏற்று கொண்டாலும் தொண்டர்கள் மத்தியில் சசிகலாவுக்கு கடும் எதிர்ப்பு காணப்படுகிறது.
அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் பலர் தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்றும் தீபா தலைமையில்தான் அதிமுக செயல்பட வேண்டும் என்றும் போஸ்டர்கள், பேனர்கள் மூலம் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தீபா புதிய கட்சி ஆரம்பிக்கவுள்ளதாகவும், அந்த கட்சிக்கு ‘அம்மா திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற பெயரும் ‘இரட்டை ரோஜா’ என்ற சின்னமும் வைக்க வேண்டும் என்றும் அதிமுக தொண்டர்கள் தங்கள் ஆசையை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர். தொண்டர்களின் ஆசையை தீபா நிறைவேற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.