உயிருக்கு போராடி வரும் இரு விளையாட்டு வீரர்கள். ஏன் தெரியுமா?

உயிருக்கு போராடி வரும் இரு விளையாட்டு வீரர்கள். ஏன் தெரியுமா?

நார்வே நாட்டை சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்களுக்கு தவறுதலாக ‘காஃபின்’ என்ற மருந்து அளவுக்கு அதிகமாக கொடுக்கப்பட்டதால் உயிருக்கு போராடி வருவதாக கூறப்படுகிறது. மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்களின்படி அவர்கள் இருவரும் கிட்டத்தட்ட மரணம் அடைந்துவிட்டதாகவே கூறப்படுகிறது.

பொதுவாக விளையாட்டு வீரர்கள் உடல்திறன் பெற 0.1 கிராம் ‘காஃபின்’ கொடுக்கப்படுவது வழக்கம். 0.3கிராம் வரை கொடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நார்வே நாட்டை சேர்ந்த அலெக்ஸ் ரொசிட்டோ மற்றும் லுக் பார்க்கின் ஆகியோர்களுக்கு தவறுதலாக 30 கிராம் ‘காஃபின்’ கொடுக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக இருவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவரின் உடல்நிலையும் அபாய கட்டத்தில் இருப்பதாகவும், இருவரும் உயிர் பிழைக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

தவறுதலாக அதிக ‘காஃபின்’ கொடுத்த பல்கலைக்கழக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply