சென்னை பள்ளியில் சுவர் இடிந்து 2 மாணவிகள் பரிதாப பலி. பெரும் பரபரப்பு

chennai schoolசென்னை பள்ளி ஒன்றில் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடையாறு அவ்வை இல்லம் அறக்கட்டளைக்கு டிவிஆர் பெண்கள் பள்ளி சொந்தமாக உள்ளது. இந்த பள்ளியில் ஐநூறுக்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனர்.

சென்னையில் நேற்று திடீரென பல்வேறு பகுதிகளில் பெய்த மழை இந்த பள்ளி இருந்த பகுதியிலும் பெய்தது. இந்த மழையில் டிவிஆர் பெண்கள் பள்ளி வளாகத்தில், பயன்படுத்தப்படாமல் இருந்த பாழடைந்த கட்டடத்தின் சுவர் ஒன்று நேற்று மாலை இடிந்து விழுந்தது.

chennai school 1

இந்த விபத்தில் பெசன்ட்நகர் ஊரூர் குப்பத்தை சேர்ந்த மாணவிகள் மோனிஷா, நந்தினி ஆகிய இரண்டு மாணவிகளும் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சந்தியா எந்த மாணவியும் பலத்த காயம் அடைந்து சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவிகள் உயிரிழந்த சம்பவம், சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply