சிந்து சமவெளி, மிருகம், உயிர் போன்ற சர்ச்சைக்குரிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சாமி, தற்போது இயக்கி வரும் படத்தில் தல, தளபதி குறித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் வைத்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடித்திருக்கும் இரண்டு கதாநாயகிகளா ஸ்ரீப்ரியங்கா மற்றும் வர்ஷா ஆகியோர் அஜீத், விஜய் ரசிகைகளாக வருவதாகவும், இருவரும் தங்களுக்கு பிடித்த நடிகர்தான் சிறந்த நடிகர் என அடிக்கடி மோதிக்கொள்ளும் காட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஸ்ரீப்ரியங்கா அஜித் பெருமை குறித்தும் பேசுவது போன்றும், வர்ஷா அஸ்வதி விஜய் பெருமை குறித்து பேசுவது போன்றும் காட்சிகள் உள்ளதாகவும் ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் காட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் அஜீத் ரசிகையாக நடித்திருக்கும் ஸ்ரீப்ரியங்கா இறுதியில் கதாநாயகன் அர்ஜுனாவை திருமணம் செய்து கொள்வது போன்ற காட்சியும் உள்ளதாம்.
அஜீத், விஜய்க்காக இரண்டு நடிகைகள் மோதிக்கொள்ளும் காட்சியை தவிர்க்குமாறு இயக்குனர் சாமியிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் ஆனால் அதற்கு சாமி மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
வழக்கமாக தனது படங்களில் ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பிவிடும் சாமி, இம்முறை தல, தளபதியை வம்புக்கு இழுத்துள்ளதாக கூறப்படுகிறது.