ஸ்ரீரங்கம் கோவிலை உலக புராதன சின்னமாக்க யுனெஸ்கோவிற்கு பரிந்துரை.

srirangamதமிழகத்தில் கும்பகோணம் அருகில் உள்ள ஐராவதேஸ்வரர் ஆலயம், தஞ்சை பெரிய கோவில், ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் கோவில், மாமல்லபுரம் கோவில்கள் ஆகியவை ஏற்கனவே யுனெஸ்கோவால் புராதன சின்னங்களாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மேலும் ஒருசில கோவில்களை புராதன சின்னங்களாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த வரிசையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், காரைக்குடி செட்டிநாடு கட்டிடங்கள் ஆகிய இரண்டையும் மத்திய அரசின் தனது பரிந்துரை பட்டியலில் சேர்த்து யுனெஸ்கோவிற்கு அனுப்பியுள்ளது. மத்திய அரசின் பட்டியலை ஆய்வு செய்த பின்னர் யுனெஸ்கோ இறுதி முடிவு எடுக்கும்.

யுனெஸ்கோவில் பட்டியலில் ஸ்ரீரங்கம் கோவிலை இடம்பெற செய்ய தமிழக அரசு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதிலும், மோடி அரசு வந்தபின்னர்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply