பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கபுர்தலா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருட்டு வழக்கு சம்பந்தமாக அதே கிராமத்தை சேர்ந்த 2 பெண்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர்.
காவல் நிலையத்தில் இரண்டு பெண்களையும் விசாரணை செய்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் ரக்பிர் சிங் என்பவர் இரண்டு பெண்களும் திருட்டை ஒப்புக்கொள்ளாத ஆத்திரத்தில் அவர்கள் மீது மின்சாரத்தை பாய்ச்சி கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட்டிடம் இந்திரஜித் கவுர் அவர்களிடம் போலீஸாரின் அத்துமீறல் குறித்து புகார் அளித்தனர். போலீஸ் சூப்பிரண்ட் உத்தரவுப்படி பெண்கள் என்றும் பாராமல் விசாரணை கைதிகளிடம் கொடூரமாக நடந்துக் கொண்ட போலாத் காவல் நிலைய உதவி சப்-இன்ஸ்பெக்டர் ரக்பிர் சிங் என்பவரை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.