பிலிப்பைன்ஸ் நாட்டில் சூறைக்காற்றுடன் பயங்கர மழை. 3,000 பேர் பாதிப்பு

typhoonபிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்றிரவு கடுமையான புயல் தாக்கியதில் இதுவரை 2 பேர் பலியாகியுள்ளனர். மேலும் புயலின் தாக்கம் நீடிப்பதால் 3,000 பேர் பாதுகாப்பான வெளியேற்றப்பட்டு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதால் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

நோயுள் என்ற புயல் கடந்த இரண்டு நாட்களாக பிலிப்பைன்ஸ் நாட்டை அச்சுறுத்தி வந்தது. இந்நிலையில் நேற்று 220 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி புயல் கரையை கடந்தது. இந்த புயற்காற்றல் மரங்கள் வேறோடு சரிந்தது. மேலும் சாலையில் இருந்த  மின் கம்பங்கள் சாலையின் நடுவில் சாயந்ததால் மின்சாரம் தடைபட்டு அந்நாட்டின் பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளது. கடுமையான சூறைக்காற்றுடன் பலத்த மழையும் கொட்டியதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளத்தில் பயிர்கள் மூழ்கி கடும் சேதம் அடைந்தன.

அபார்ரி நகரில் ஒரு வீட்டில் மின்சாரம் தாக்கி 70 வயது முதியவர் ஒருவரும் அவருடைய ஒரே மகனும் பரிதாபமாக பலியாகினர். இசபெல்லா, கஹாயன் பகுதிகளில் கடற்கரையோரம் வசித்த 3 ஆயிரம் பேர்களை மீட்புப்படையினர் அங்கிருந்து வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். இந்த ஆண்டில் பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கும் நான்காவது புயல் இது என்பது குறிப்பிடத்தக்கது. புயலினால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப்படையினர்களும், ராணுவத்தினர்களும் மீட்புப்பணியில் இரவுபகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply