பொருளாதார தடை விதித்த சில மணி நேரங்களில் மீண்டும் ஏவுகணை சோதனை. வடகொரியாவின் அட்டூழியம்
ஆசிய நாடுகளில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனை நடத்தி அண்டை நாடான தென்கொரியாவை அச்சுறுத்தி வந்த நிலையில், சமீபத்தில் உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் மிகவும் ஆபத்தான ஹைட்ரஜன் குண்டுகளை சமீபத்தில் பரிசோதனை செய்தது.
இந்நிலையில் வடகொரியாவுக்கு பாடம் புகட்டும் வகையில் அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சமீபத்தில் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதல் அளிக்கப்பட்ட சிலமணி நேரங்களில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு பதிலடி தரும் வகையில் மீண்டும் ஏவுகணைகளை சற்று முன்னர் கடலில் சோதனை செய்துள்ளது. இந்த தகவலை அண்டை நாடான தென்கொரியாவும் உறுதிப்படுத்தியுள்ளது.
வடகொரியாவின் இந்த அட்டூழியத்தால் ஐ.நா. உள்பட உலக நாடுகள் தங்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றன. அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வரும் வடகொரியா தலவர் கிம் ஜாங் அன்’ அவர்களுக்கு உலகம் முழுவதும் கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.