நைஜீரியா கடல் பகுதியில் பயணித்த அமெரிக்க எண்ணெய் கப்பலை வழிமறித்த கடல் கொளையர்கள், அமெரிக்காவைச் சேர்ந்த கப்பலின் கேப்டன் மற்றும் என்ஜினியரை கடத்திச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக, வாஷிங்டன் நகரில் பேட்டியளித்த வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் மேரி ஹர்ஃப், ‘தற்போதைய நிலையில் நமது நோக்கம் கடத்தப்பட்ட 2 அமெரிக்கர்களையும் பாதுகாப்பாக மீட்பது தொடர்பாக மட்டுமே இருக்க வேண்டும்‘ என்று கூறியுள்ளார்.
சோமாலியா கடற்கொள்ளையர்களின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகமாகி வருவது குறிப்பிடதக்கது.