நிபா வைரஸால் உயிரிழந்த கேரள நர்ஸ் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற அபுதாபி தொழிலதிபர்கள்

நிபா வைரஸால் உயிரிழந்த கேரள நர்ஸ் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற அபுதாபி தொழிலதிபர்கள்

சமீபத்தில் நிபா வைரஸ் தாக்கிய ஒரு குடும்பத்தினர்களுக்கு சிகிச்சை அளித்ததால் கேரள நர்ஸ் லினி என்பவரையும் அந்த வைரஸ் தாக்கியதால் அவர் பரிதாபமாக மரணம் அடைந்தார். மரணம் அடைவதற்கு முன் அரபு நாட்டில் இருக்கும் தனது கணவருக்கு லினி உருக்கமாக ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் தங்களுடைய குழந்தைகளை அரபுநாட்டிற்கே அழைத்து சென்றுவிடுங்கள் என்று கணவருக்கு அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்

இந்த நிலையில் லினி மரண செய்தியை அறிந்த, அபுதாபியில் வசித்து வரும் சாந்தி பிரமோத் மற்றும் ஜோதி பாலத் ஆகிய இரண்டு தொழிலதிபர்கள் நர்சு லினியின் இரண்டு குழந்தைகளான ஹிர்துல் மற்றும் சித்தார் ஆகிய இருவரின் படிப்பு செலவுகள் முழுவதையும் தாங்கள் ஏற்பதாக அறிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் கேரள மாநிலம் பாலக்காட்டில் அவிட்டிஸ் மருத்துவ அறிவியல் மையத்தின் செயல் இயக்குனர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொழிலதிபர்களின் இந்த உதவிக்கு இருவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Leave a Reply