அமைச்சர் பதவி ஏற்றதும் வருத்தம் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்: என்ன காரணம்?
இன்று காலை உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் என்பதும் அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தான் அமைச்சர் பதவி ஏற்றதை பார்ப்பதற்கு கலைஞர் தாத்தா மற்றும் அன்பழகன் தாத்தா இல்லை என்பது தனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது என்று கூறியுள்ளார்
இருப்பினும் தனது தந்தை தனக்கு ஆசி செய்ததாகவும் அவர் ஆசி செய்தது கலைஞர் தாத்தா ஆசி செய்தது போல் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.