படிக்க வந்த இடத்தில் விபச்சாரம் செய்த இளம்பெண் குத்தி கொலை
உகாண்டா நாட்டில் இருந்து இந்தியாவிற்கு படிக்க வைத்த இளம்பெண், விபச்சாரத்தில் ஈடுபட்டதால் கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
உகாண்டா நாட்டை சேர்ந்த புளோரன்ஸ் நகயாகி என்ற இளம் பெண் பெங்களூரில் படித்து வருகிறார். படித்து கொண்டே ஆடம்பர செலவிற்காக அவர் விபச்சாரத்திலும் ஈடுபட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில் இருந்து பெங்களூருக்கு படிக்க வந்த இஷான் என்ற மாணவர், புளோரன்ஸ் உடன் இன்பமாக இருக்க ரூ.5000 விலைபேசி,
அவரை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் அங்கு இஷானின் நண்பரும் இருந்தால் இருவருக்கும் சேர்த்து கூடுதலாக ரூ.5000 புளோரன்ஸ் கேட்டுள்ளார்.
இதனால் வாக்குவாதம் உண்டாகி, புளோரன்ஸ், இஷானை கத்தியால் குத்த முயற்சி செய்துள்ளார். ஆனால் இஷான், அந்த கத்தியை பிடுங்கி புளோரன்ஸை குத்தி கொலை செய்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பெங்களூர் காவல்துறையினர் உடனடியாக இஷானை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.